பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்திய அரசு அமைப்புபாபா அணு ஆராய்ச்சி மையம் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதன்மையான அணுசக்தி ஆராய்ச்சி நிலையமாக இதனை இந்தியாவின் புகழ் பெற்ற அறிவியல் வல்லுனரான ஹோமி பாபா அவர்கள் தலைமையில் செயல்படுத்தியதாகும். இங்கு பல வகையான அணு சக்தியை சாதகமான வழிகளில் பயன்படுத்துவதற்கான அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் உயர்தர ஆராய்ச்சிக்காகவே உருவாக்கியவை ஆகும். பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவை யாற்றிவரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற்சி, தற்கால மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் சாராத அணுக்கரு ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் நாட்டை வலிமைப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. மேலும் ரோபோடிக்ஸ், சூப்பர்- கணினிகள், லேசர்கள், முடுக்கிகள், மனித மரபணுக்கள், நானோ-தொழில்நுட்பம் மற்றும் உயர் கடத்திகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களில் சிறப்புடன் செயலாற்றி வருகிறது. அடிப்படை அறிவியலின் முக்கியம் வாய்ந்த பல துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது